×

120 படங்கள் உருவாக்கிய சீன பட இயக்குனர் மரணம்

ஹாங்காங்: நடிகர் ஜாக்கிசானின் ஆஸ்தான இயக்குனரும், 120க்கும் மேற்பட்ட சீன மொழிப் படங்களை இயக் கியவருமான சோர் யுவான் (87), வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். 70க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ள சோர் யுவான், 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். போலீஸ் ஸ்டோரி படத்தில் ஜாக்கிசானுக்கு இணையான கேரக்டரில் நடித்திருந்தார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜாக்கி சான் விடுத்துள்ள அறிக்கையில், ‘திரையுலகில் அவர் உருவாக்கிய சீடர்களில் நானும் ஒருவன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்….

The post 120 படங்கள் உருவாக்கிய சீன பட இயக்குனர் மரணம் appeared first on Dinakaran.

Tags : Hong Kong ,Jackie Chan ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...